தங்கம் கோப்புப்படம்
தமிழ்நாடு

சரிவுக்குப்பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை! ஒரே நாளில் சவரன் ரூ.640 உயர்வு - பின்னணி என்ன?

Jayashree A

இந்தியாவைப் பொருத்தவரை தங்கம் என்பது ஒரு அத்தியாவசியமான உலோகம். ஒரு கிராமாவது தங்கம் வாங்கவேண்டும் என்று மக்கள் எல்லோர் மனதிலும் எண்ணம் உண்டு. கிடைக்கும் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்பவர்களும் உண்டு. அப்படிப்பட்ட தங்கமானது கடந்த இருபது வருடங்களில் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கமானது கடந்த சில மாதங்களில் ரூபாய் 50,000-க்கும் அதிகமாக விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக தங்கமானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. அந்த வகையில் இன்று தங்கமானது ஒரு சவரன் 640 ரூபாய் உயர்ந்து, 54,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6850 க்கு விற்பனையாகிறது.

இந்த ஏற்ற இறக்கத்திற்கு காரணம் அமெரிக்காவின் கடன்பத்திர வட்டிவிகிதம் என்று கூறப்பட்டாலும், தங்கமானது பங்குசந்தையில் முதலீட்டாளர்களின் முக்கிய கவனத்தை பெற்றிருப்பதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.