தமிழ்நாடு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் வங்கியில் ஒப்படைப்பு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் வங்கியில் ஒப்படைப்பு

Rasus

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 13 கிலோ தங்கக் கவசம் வழங்கியிருந்தார். இந்த கவசத்தை அதிமுகவின் பொறுப்பில், மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வைத்திருக்கவும், ஒவ்வொரு ஆண்டு ஜெயந்தி விழாவின்போது, அதிமுக பொருளாளர் மூலமாக விழாக் குழுவினரிடம் ஒப்படைக்கவும் ஜெயலலிதா வழிவகை செய்திருந்தார். ஆனால் இந்த ஆண்டு தங்கக் கவசத்தை பெறுவதில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி அணியிடம் போட்டி ஏறப்பட்டது. இதனையடுத்து தங்க கவசம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை ஆட்சியர் அதனை ராமநாதபுரம் ஆட்சியரிடம் ஒப்படைக்க, அவர் தேவர் சிலைக்கு கடந்த 27-ஆம் தேதி தங்க கவசத்தை அணிவித்தார்.

இந்த நிலையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மாவட்ட ஆட்சியர் நடராஜன் முன்னிலையில் சிலையிலிருந்து கவசம் எடுக்கப்பட்டு மதுரை கொண்டு செல்லப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் கவசத்தை பெற்று பேங்க் ஆப் இந்தியா கிளையில் ஒப்படைத்தார்.