Chennai High court pt desk
தமிழ்நாடு

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட எட்டு பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம், உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

webteam

கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு தீர்ப்பளித்தது.

அதில், கோகுல்ராஜ், சுவாதியுடன் திருச்செங்கோடு கோவிலுக்குச் சென்றது, அங்கிருந்து அவர் மாயமானது, இதையடுத்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கோகுல்ராஜ் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது போன்ற குற்றச் சங்கிலி தொடரை காவல்துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகவும், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி, யுவராஜ் உள்ளிட்ட எட்டு பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

gokulraj murder case

இவர்கள் எட்டு பேருக்கும் எந்த தண்டனைக் குறைப்பும் வழங்காமல், வாழ்நாள் முழுவதும் சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பிரபு மற்றும் கிரிதர் ஆகிய இருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, ஐந்து ஆண்டுகளாக குறைத்தும் தீர்ப்பளித்தனர். மேலும், மதுரை நீதிமன்றத்தால் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதை உறுதி செய்த நீதிபதிகள், யுவராஜ் உள்பட 10 பேரின் மேல் முறையீட்டு வழக்குகளையும், ஐந்து பேர் விடுதலைக்கு எதிராக கோகுல்ராஜின் தாய் சித்ராவும், காவல் துறையும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.