தமிழ்நாடு

பழங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்ட தெய்வங்கள்

பழங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்ட தெய்வங்கள்

webteam

பழங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்ட விநாயகர் மற்றும் மாசாணியம்மன்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவை அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகருக்கும், பேரூர் மாசாணியம்மனுக்கும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது . ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ள கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகருக்கு  புத்தாண்டையொட்டி இன்று 2 டன் பழங்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல  கோவையை அடுத்த பேரூர் பகுதியிலுள்ள பிரசித்திப் பெற்ற மாசாணியம்மன் கோயிலில் இன்று தமிழ் புத்தாண்டு முன்னிட்டு  அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாசணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

இதனையடுத்து முற்றிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளும்  அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. டன் கணக்கில் பழங்கள் மற்றும் காய்கறிகளைகொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்த அம்மனை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர், தொடர்ந்து மாலை வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது .