தமிழ்நாடு

குலாம்நபி ஆசாத் வெளியேறியது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவே – கார்த்தி சிதம்பரம்

குலாம்நபி ஆசாத் வெளியேறியது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவே – கார்த்தி சிதம்பரம்

webteam

குலாம்நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவுதான் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, குலாம்நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல. ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராக போட்டியிட விரும்பினால் எதிர்த்து வேறு யாரும் போட்டியிடமாட்டார்கள். அவர்தான் தலைவர்.

நாங்கள் ஆளுங்கட்சியான திமுகவின் ஆதரவாளராகதான் செயல்பட முடியும். ஏனென்றால், நாங்கள் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றவர்கள். சீமான் போன்றவர்கள் கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டு தங்களது மேடை பேச்சுகளை வைத்துக்கொள்ள வேண்டும். அநாகரீகத்தை கடைபிடிக்கக் கூடாது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மிகவும் ஆபத்தானது. கல்வியாளர்கள், மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.