Shankar Jiwal PT DESK
தமிழ்நாடு

"போலீயான ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வாங்காதீங்க" - கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை காவல் துறையில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் இயங்கி வரும் போலி கடவுச்சீட்டுக்கள் (Passports) புலனாய்வு பிரிவானது கடவுச்சீட்டு மோசடி தொடர்பாக குற்றம் செய்யும் நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

PT WEB

போலியான ஆவணங்கள் மூலம் கடவு சீட்டுகளை வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்தில் ஈடுபடுவோர் மீதும் அதற்கு துணை புரியும் ஏஜென்ட்கள் மீதும் கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை காவல் துறையில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் இயங்கி வரும் போலி கடவுச்சீட்டுக்கள் (Passports) புலனாய்வு பிரிவானது கடவுச்சீட்டு மோசடி தொடர்பாக குற்றம் செய்யும் நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இவ்வழக்கு தொடர்பான புகார்கள் மண்டல கடவுச்சீட்டு (RPO) அலுவலரிடம் இருந்தும், மண்டல வெளிநாட்டினர் பதிவாளரிடம் இருந்தும் பெறப்படுகின்றன. (FRRO) கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் பதிவு செய்யப்பட்ட 236 வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது.

பாஸ்போர்ட்

இதில் 95 இந்திய நாட்டினரும், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 59 நபர்களும் இலங்கையை சேர்ந்த 65 நபர்களும், மற்ற வெளிநாடுகளைச் சேர்ந்த 8 நபர்களும் இவ்வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தனர். இதில் தொடர்புடைய வெளிநாட்டு குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாம்களில் வைக்கப்படு உள்ளனர்.வழக்கு முடியாமல் இருப்பதால் வெளி நாட்டவரை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்புவதிலும், முகாம்களில் வைத்திருப்பதிலும், சில சிக்கல்கள் உள்ளனார். வெளி நாட்டின் முகாமில் இருந்து தப்பிச்செல்லும் நிகழ்வுகளும், ஏற்படுகிறது.

காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் வழக்கு முடிக்கப்பட்டு விரைவில் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் போலியாக ஆவணங்களை கண்டறிந்து ரத்து செய்து வருகின்றனர். இந்த குற்றத்தோடு தொடர்புடைய குற்றவாளிகளின் கடவுச்சீட்டுகளை சரி பார்த்த காவலர்களின் (PVR) மீது நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. போலி ஆவணம் மூலம் கடவுச்சீட்டைப் பெற உதவிய ஏஜென்ட் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.