மலை மாவட்டமான உதகை அருகே காட்டெருமை தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளின் புகழிடமாக இருந்து வரும் நிலையில் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகி உள்ளது. இவ்வாறு வரும் வனவிலங்குகள் பயிர்கள் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்துவதால், அதை விரட்ட மனிதர்கள் முற்படும் போது மனித வனவிலங்குகள் மோதல் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகி வருகின்றன.
இந்நிலையில் உதகையை அடுத்த கொல்லிமலை கிராமத்தில் வசித்து வருபவர் பாலசுப்ரமணியம். இவர் இன்று தோட்டவேலைக்கு சென்றுள்ளார். மீண்டும் மதிய உணவை முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் போது அங்கிருந்த காட்டெருமை இவரை தாக்கியது. இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை பலத்த காயங்களுடன் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை தொடர்ந்து இவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டார்.