தமிழ்நாடு

சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்... போலீஸ் குவிப்பு

Rasus

சென்னையில் இன்றும், நாளையும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்படவுள்ளன. பாதுகாப்பு பணிக்காக 20 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்திக்காக சென்னை முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது. 5 அடி முதல் 10 அடி உயரத்துக்கு நகரம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரத்து 500 சிலைகள் இன்றும், நாளையும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்படவுள்ளன.

விநாயகர் சிலை ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழியிலேயே செல்ல வேண்டும். ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் கரைக்கும் இடத்தை சென்றடைய வேண்டும் என பல்வேறு வழிகாட்டுதல்களை காவல்துறையினர் பிறப்பித்துள்ளனர். விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக பட்டினபாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊர்வலம் அமைதியான முறையில் நடப்பதற்காக 20 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.