தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம்

Rasus

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை முதலில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோயில்களுக்கு சென்று விநாயகப் பெருமானை வழிபாட்டுச் செல்கின்றனர். பல இடங்களில் விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. அங்கும் ஏராளமான பக்தர்கள் விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டுச் செல்கின்றனர். மும்பை உள்பட நாட்டின் முக்கிய இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டியுள்ளது.

விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை மாநகரில் 2520 விநாயகர் சிலைகளை நிறுவி வழிப‌ட ‌ அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சென்னை பெ‌ரு நகர காவல் ஆணையர் உத்தர‌‌வின் பேரில் 3 ‌ கூடுதல் ஆணையர்கள் தலைமையில் 10 ஆயிரம் காவல்துறையினர் விநாயகர் சதூர்த்திக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதேபோல், அனுதிக்கப்பட்ட‌ வழித்தடங்களில் சென்று பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம்‌ , திருவெற்றியூர், எண்ணூர் ஆகிய 5‌‌ இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை ‌கரைக்க வேண்டுமெனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவ்வாறு குறிப்பிட்டுள்ள இடங்களில் கிரேன்கள், உயிர் காக்கும் குழுக்கள்‌ போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.