மகேந்திரகிரியில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிபெற்றதாக அறிவிப்பு.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் C20E11 MK III என்ற கிரையோஜெனிக் என்ஜினின் வெப்ப சோதனை மற்றும் உந்தும சோதனை நேற்று மாலை நடைபெற்றது.
சுமார் 70 வினாடிகள் நடைபெற்ற இந்த சோதனை முழு வெற்றி பெற்றதாக மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி இந்திய விண்வெளி துறையின் செயல்பாடுகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.