தமிழ்நாடு

சேதங்களை கணக்கெடுக்க அதிகாரிகள் நியமனம் : ககன் தீப்‌சிங் பேடி

சேதங்களை கணக்கெடுக்க அதிகாரிகள் நியமனம் : ககன் தீப்‌சிங் பேடி

webteam

கஜா புயல் சேதங்களை கணக்கெடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிகாரி ககன் தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கஜா புயலால் நாகை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்குப்புக்கு உள்ளாகியுள்ளன.‘கஜா’ புயல், நாகை, தஞ்சை, திரு‌வாரூர், புதுக்கோட்டை  உள்ளிட்ட 6 மாவட்டங்களை புரட்டிப்போட்டுச் சென்றிருக்கிறது.’கஜா’ புயலால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புயல் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை,தென்னை,மா,வாழை,சவுக்கு தோப்பு, நெல் பயிர்களை தமிழக வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி பார்வையிட்டார். 

இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கஜா புயலால் பயிர்கள் எல்லா இடங்களிலும் சேதப்படுத்தியுள்ளதை பார்த்தோம் குறிப்பாக தென்னை, மாமரம், வாழைமரம்,நெல் பயிர்கள்,காய்கறிகள்,சவுக்கு அனைத்தும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக தென்னை மரங்கள், காய்கறிகள் திண்டுக்கல் பகுதியில் அதிகமாக சேதமடைந்துள்ளது. தோட்டக்கலை பயிர்கள் புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக முதல்வரின் அறிவுருத்தலின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் கீழ் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நேரடியாக வேளான்மை அதிகாரி, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நியமிக்க்ப்பட்டுள்ளனர். அவர்களுடன் உடன் கிராம நிர்வாக அலுவலர்கள் இணைந்து பாதிப்பு குறித்து கணக்கு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். 


மேலும் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் சேதங்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிப்பர், அதன் அடிப்படையில் அரசு மூலம் இழப்பீடு கிடைக்கும்.நிறைய இடங்களில் அதிகாரிகள் செல்லும் போது சாலைகள் கிளியர் ஆகாமல் உள்ளது சாலை மறியல் பிரச்சினைகள் உள்ளது சர்வே எடுக்க வரும் அதிகாரிகளுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போது சீக்கிரமாக அரசு மூலம் இழப்பீடு கிடைக்க செய்ய முடியம். 2017-18 ஆம் ஆண்டிற்காக குறுவை இன்சூரன்ஸ் தமிழ் நாட்டிற்கு 80 லிருந்து 85 கோடி இழப்பீடு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.