தமிழ்நாடு

யானைகளின் வழித்தடங்களை காக்க நிதி திரட்டல் !

Rasus

யானைகளுக்கான வழித்தடங்களை பாதுகாக்கும் நோக்கில் 5 தன்னார்வ அமைப்புகள் இணைந்து நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

சமீப காலமாகவே யானை- மனித மோதல்கள் அதிகரித்து வருகிறது. யானைகள் ஊருக்குள் புகுந்துவிடுகின்றன, பயிர்களை சேதப்படுத்துவிடுகிறது என மக்கள் கூறுவதை காண முடிகிறது. அதேமசயம் இதற்கெல்லாம் காரணம், மனிதர்கள் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்ததோடு மட்டுமில்லாமல் அதன் வாழ்விடங்களையும் தங்கள் இடங்களாக மாற்றியது தான் காரணம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஒரு ஆய்வில் கூட நாடு முழுவதும் 7 யானைகளின் வழித்தடங்கள் சேதப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள யானைகளின் வழித்தடங்களை பாதுகாக்கும் விதமாக 5 தன்னார்வ அமைப்புகள் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளன. தற்போது நாடு முழுவதும் 101 யானைகள் வழித்தடங்கள் உள்ளன. இதில் 96 வழித்தடங்களை பாதுகாக்கும் முயற்சியில் 5 தன்னார்வ அமைப்புகள் ஒன்றுடன் ஒன்றாக கைகோர்த்துள்ளன. இதற்காக ரூ.187.16 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளன.

மொத்தமாக 101 யானை வழித்தடங்கள் இருந்ததாக கண்டறியப்பட்ட நிலையில் 5 யானை வழித்தடங்களை மாநில அரசுகள் உதவியுடன் இந்த தன்னார்வ அமைப்புகள் பாதுகாத்துள்ளன. தற்போது மற்ற 96 யானைகள் வழித்தடங்களை பாதுகாக்கும் முயற்சியில் அந்த அமைப்புகள் இறங்கியுள்ளன.