ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறைக்கு ரூ.13,967 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறைக்கு ரூ.13,967 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.2,634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சத்துணவு திட்டத்துக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,953.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி உதவித்தொகை திட்டத்துக்காக ரூ.1,932.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.