தமிழ்நாடு

மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா

மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா

webteam

தமிழக கேரள வன எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் வரும் ஏப்ரல் 30ம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று "சித்திரை முழு நிலவு" விழா நடக்கிறது. இதையொட்டி கேரளாவின் தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனச்சாலை அன்று ஒரு நாள் மட்டும் திறந்துவிடப்படுகிறது. தமிழக, கேரள பக்தர்கள் குமுளியில் இருந்து வனச்சாலை வழியாக 16 கிலோமீட்டர் ஜீப்பில் பயணித்தும், நடந்தும் கோவிலுக்கு சென்று திரும்புகின்றனர். லோயர்கேம்ப் பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர். இந்த ஆண்டு 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கண்ணகி கோவிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக செல்லும் தேனி மவட்டம் லோயர்கேம்ப் பழியக்குடியில் கோவில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தேனி மாவட்ட கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பழியக்குடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லும் சாலையை சீராக்க கோரிக்கை வைக்கப்பட்டது.