தமிழ்நாடு

முழு ஊரடங்கு: வேலையும் இல்லை பணமும் இல்லை... வாலிபர் எடுத்த விபரீத முடிவு

முழு ஊரடங்கு: வேலையும் இல்லை பணமும் இல்லை... வாலிபர் எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

மதுரையில் ஊரடங்கால் பணமின்றி தவித்த வாலிபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை, திருமங்கலம் வடகரை பகுதியில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் ஈடுபட்டனர். இதில், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பாண்டியன் நகர் அருகே உள்ள செல்வ காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பொன்வண்ணன் என்பவரது மகன் பவுன் என்ற பால் இளங்கோவன் (28). என்பது தெரியவந்தது.

இவர், கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் வேலை இல்லாமல் செலவுக்கும் பணம் இல்லாமல் தவித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். இதை கண்ட பெற்றோர்கள் அவரை திட்டி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வாலிபர் வடகரை பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருமங்கலம் போலீசார் வாலிபர் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

======>

மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)