தமிழ்நாடு

விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாள் – எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் மரியாதை

விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாள் – எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் மரியாதை

Veeramani

விடுதலைப்போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 215 வது நினைவு நாளை முன்னிட்டு அவரின்  திருவுருவ சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினும் தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தீரன் சின்னமலையின் நினைவாக மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.