மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கும் முறை இன்று தொடங்குகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதை தொடக்கி வைக்கிறார்.
தமிழர்களின் கட்டடக்கலையைப் பறைசாற்றும் விதமாகவும், ஆன்மிகத்தலமாகவும் புகழ்பெற்றது மதுரை மீனாட்சியம்மன் கோயில். நாள்தோறும் 30 ஆயிரம் பேர் வரை மீனாட்சி அம்மனை தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக, இலவசமாக லட்டு வழங்க கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி இன்று முதல் லட்டு வழங்கப்படுகிறது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள், மீனட்சி அம்மனை தரிசித்துவிட்டு, சொக்கநாதரை தரிசிக்கச் செல்லும் வழியில் முக்குறுணி விநாயகர் சந்நிதி அருகே, பக்தர்களுக்கு இந்த இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளது.
கோயில் நடை திறந்தது முதல் இரவு நடை அடைக்கப்படும் வரை லட்டு பிரசாதம் வழங்கப்படும். காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்