தமிழ்நாடு

எச்.ஐ.வி ரத்தம் - கர்ப்பிணிக்கு இலவச வீட்டு மனைப் பட்டா

webteam

விருதுநகர் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுடன் கூடிய ரத்தம் செலுத்தப்பட்ட‌ கர்ப்பிணிக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வ‌ழங்‌கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி. தொற்று இருந்த ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்‌ள சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் முதல் தளத்தில் வைத்து, தனி அறையில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு, மகப்பேறு மருத்துவ தலைவர் சாந்தி தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மகப்பேறுக்கான சிகிச்சையும், எச்.ஐ.வி. நோய் எதிர்ப்பு சிகிச்சையும் அளிக்கப்படுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 மாத சிசிவுக்கு எச்.ஐ.வி. தொற்று பரவாமல் தடுப்பதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றும், குழந்தை பிறந்தவுடன் அதற்குத் தேவையான மருந்துகள் கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிறக்கப்போகும் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று பரவாமல் 100 சதவிகிதம் தடுக்கப்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விருதுநகர் மாவட்ட ஆட்சி‌யர், ‌மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மற்றும் கோட்டாட்சியர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதைதொடர்ந்து அப்பெண் கு‌டியி‌ருக்கும் பகுதியில் 3 செண்ட் நிலத்தில் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் அரசு சார்பில் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. மேலும் வீடு கட்டுவதற்கான அரசாணையும் ‌வழங்கப்பட்டது.