சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் 4 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அயனாவரத்தில் வசித்து வந்த சங்கர் என்ற ரவுடி மீது கொலை, கொலைமுயற்சி உள்ளிட்ட 51 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி, அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான காவலர்கள், கஞ்சா வியாபாரியான ரவுடி சங்கரை பிடிக்க முயன்றனர். அப்போது, காவலர் முபாரக்கை, ரவுடி சங்கர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடி சங்கர் உயிரிழந்தார். இந்நிலையில், ரவுடி சங்கர் வெட்டியதாகக் கூறப்படும் முதல்நிலை காவலர் முபாரக் உள்ளிட்ட 4 காவலர்கள் வேறு காவல்நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரவுடி சங்கர் என்கவுண்டர் தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரித்து வரும் நிலையில், காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, டிஜிபி-க்கு சென்னை காவல்துறை பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.