தமிழ்நாடு

வாக்குப்பதிவு நாளில் தேவையான அளவு பேருந்து போக்குவரத்து செய்யப்பட்டிருந்தது முதல்வர் பழனிசாமி

வாக்குப்பதிவு நாளில் தேவையான அளவு பேருந்து போக்குவரத்து செய்யப்பட்டிருந்தது முதல்வர் பழனிசாமி

webteam

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்ததுள்ளது. இந்தச் சூழலில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  காலியாக உள்ள தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துமாறு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. 

இந்நிலையில் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தலில் அதிமுக அதிக வெற்றிபெறும் என்று கூறினார். மேலும் அடுத்து வரும் தேர்தலில் இதே கூட்டணி தொடர வாய்ப்புள்ளதாக கூறிய முதலமைச்சர், வாக்குப்பதிவு நாளில் தேவையான அளவிற்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என்றும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.