முன்னாள் மாணவிகள் - school Reunion புதிய தலைமுறை
தமிழ்நாடு

மயிலாடுதுறை: ‘நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே...’ - ரீ-யூனியனில் நெகிழ்ந்த 1982 தோழிகள்!

PT WEB

செய்தியாளர் - ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் முன்னாள் மாணவிகள் சங்கம விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் 1982 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இப்பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Girls school Reunion

ஆண்டுதோறும் நடத்தப்படும் முன்னாள் மாணவர்களின் சங்கம் விழா, கடந்த ஆறு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர் சவரியம்மாள் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் அலெக்சாண்டர், இவ்வருடம் முறையே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தினர்.

Girls school Reunion

முன்னாள் மாணவியும் டி.பி.டி.ஆர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசியருமான புஷ்பவள்ளி தலைமையில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெனிபர் பவுல்ராஜ் முன்னிலையில் இந்த ‘முன்னாள் மாணவிகளின் சங்கம விழா’ நடைபெற்றது.

இப்பள்ளியில் கல்வி பயின்று இன்று பேராசிரியர்களாக, பள்ளி தலைமை ஆசிரியர்களாக, குடும்பத் தலைவிகளாக, நிறுவன தலைவர்களாக என இன்று பல்வேறு நிலைகளிலும் உள்ள முன்னாள் மாணவிகள் இந்த விழாவில் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் நட்பை பரிமாறிக் கொண்டனர்.

நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்து கொண்ட அவர்கள், அளவலாவி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர். தாங்கள் பயின்ற வகுப்புகளுக்கு சென்றும் பள்ளியை சுற்றி வந்தும் மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்தனர். பின் தங்கள் செல்பொனில் செல்ஃபி எடுத்துக்கொண்ட அவர்கள், சேர்ந்து அமர்ந்து உணவருந்தினர்.

Girls school Reunion

முன்னதாக விழா மேடையில் முன்னாள் மாணவிகள் சேர்ந்து சினிமா பாடலுக்கு நடனமாடி அசத்தினர். தொடர்ந்து விளையாட்டுப் போட்டியில் உற்சாகமாக ஆர்வமுடன் பங்கேற்றனர்.