தமிழ்நாடு

"பள்ளிகள் திறப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - வைகைச்செல்வன்

"பள்ளிகள் திறப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - வைகைச்செல்வன்

JustinDurai
பள்ளிகள் திறப்பு விஷயத்தில் தமிழக அரசு  மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்ட அதிமுக இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் அதிமுகவின் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வைகைச்செல்வன், ''உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. கொரோனா  மூன்றாவது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என கண்டறியப்படும் வேளையில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் தமிழக அரசு பள்ளிகள் திறப்பதற்கு ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.
50% மாணவர்களோடு பள்ளிகள் செயல்படும் என தெரிவித்து இருந்தாலும் கொரோனா இல்லாத மாணவர்களை கண்டறிவது, பரிசோதனை ஆசிரியர்களுக்கு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்களுக்கு இது ஆபத்தாய் வந்து அமையும். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடவடிக்கைக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கிறது'' என அவர் தெரிவித்தார்.