தமிழ்நாடு

அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் தேவை என விவாதம் - ஜெயக்குமார் பேட்டி

அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் தேவை என விவாதம் - ஜெயக்குமார் பேட்டி

Sinekadhara

அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் தேவை என இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

அதிமுக தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. ஜூன் 23இல் நடக்கவிருக்கிற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’’அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் ஒற்றை தலைமைதான் தேவை என மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினர்.

மேலும் அதிமுக தொண்டர்களும் சரி, நிர்வாகிகளும் சரி. இப்போது எதிர்பார்ப்பது ஒற்றை தலைமையைத்தான் என்று தெரிவித்தனர். ஆனால் அந்த ஒற்றை தலைமை யார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும். இன்று நடைபெற்றது கருத்து பரிமாற்றம்தான்’’ என்று கூறினார். சசிகலா குறித்து கேட்டப்போது, கட்சிக்கு தொடர்பில்லாத சசிகலா குறித்து விவாதித்து ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்றும், அதிமுகவிற்கு அழிவு என்பது கிடையாது என்றும் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் தொண்டர்கள் சிலர் ஒற்றை தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.