''உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் அதிமுகவினரை பணி செய்யவிடாமல் தடுக்க முயற்சி நடக்கிறது'' எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
வேலூர் மாவட்டத்திலுள்ள முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரெய்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ''உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பணி செய்ய விடாமல் அதிமுகவை தடுக்க ரெய்டு நடத்தப்படுகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதாக பார்க்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் அதிமுகவினரை பணி செய்யவிடாமல் தடுக்க முயற்சி நடக்கிறது'' எனக் கூறினார்.