தமிழ்நாடு

கொரோனா பரவலை தடுப்பதற்கான அரசின் குழுவில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

கொரோனா பரவலை தடுப்பதற்கான அரசின் குழுவில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

Sinekadhara

கொரோனா பரவலை தடுப்பதற்கான அரசின் குழுவில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இடம்பெற்றுள்ளார். 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்க சட்டமன்ற கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அரசு அறிவித்துள்ளது. 13-ஆம் தேதி நடந்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆளும் திமுக சார்பில் டாக்டர் எழிலன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸின் முனிரத்தினம், பாமகவின் ஜி.கே.மணி, பாஜகவின் நயினார் நாகேந்திரன், மதிமுகவின் சதன் திருமலைக்குமார் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர்.

விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, தமிழக வாழ்வுரிமை கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலா ஒரு எம்.எல்.ஏ.-வும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அவசர அவசியம் கருதி கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற இந்தக் குழு அவ்வப்போது கூடி விவாதிக்கும் என தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கொரோனா பரவலை தடுக்க அனைத்துக் கட்சி குழுவிம் இடபெற்றுள்ளவர்கள்: மருத்துவர் நா.எழிலன், மருத்துவர் சி.விஜயபாஸ்கர், ஏ.எம்.முனிரத்தினம், ஜி.கே.மணி, நயினார் நாகேந்திரன், மருத்துவர் சதன் திருமலைக்குமார், எஸ்.எஸ்.பாலாஜி, வி.பி.நாகை மாலி, தி.ராமச்சந்திரன், ஜவாஹிருல்லா, ரா.ஈஸ்வரன், தி.வேல்முருகன், பூவை ஜெகன்மூர்த்தி.