முன்னாள் நீதிபதி கே. சந்துரு விமர்சனம் PT Web
தமிழ்நாடு

“எனில் மோசமான தீர்ப்புகளையும் கடவுள்தான் வழங்குகிறாரா?” - முன்னாள் நீதிபதி சந்துரு கேள்வி!

நீதிபதிகள் பலர் தாங்கள் பதவியேற்கும் முன்பு எடுத்துக் கொண்ட உறுதிமொழியினை பலநேரங்களில் மறந்துவிடுவதாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு விமர்சித்துள்ளார்.

PT WEB

நீதிபதிகள் பலர் தாங்கள் பதவியேற்கும் முன்பு எடுத்துக் கொண்ட உறுதிமொழியினை பலநேரங்களில் மறந்துவிடுவதாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு விமர்சித்துள்ளார்.

ராமர் கோயில் வழக்கின் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்த கருத்துக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தலைமை நீதிபதி சந்திரசூட்

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நீதிபதி கே.சந்துரு, பல நீதிபதிகளும் தங்களது தீர்ப்புகளுக்குக் காரணகர்த்தா கடவுள்தான் என கூறுவது மிகைப்படுத்தும் செயல் என குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கடவுள் அருளால் தீர்ப்புகள் பெறப்படுகின்றன என்றால், மோசமான தீர்ப்புகளையும் கடவுள்தான் வழங்குகிறாரா? அரசமைப்பு சட்டத்தை விருப்பு வெறுப்பின்றி அச்ச உணர்வின்றி ஏந்திப் பிடிப்போம் என எடுத்துக் கொண்ட உறுதிமொழியை நீதிபதிகள் மறந்துவிடுவதே இதுபோன்ற சர்ச்சைகளுக்கு காரணம்” என தெரிவித்துள்ளார்.