தமிழ்நாடு

காங். முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை

காங். முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை

rajakannan

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் ஜெயந்தி நடராஜன் வீடுகள் மற்றும் அலுவலங்கள் என பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஜெயந்தி நடராஜன் பல்வேறு விவகாரங்களுக்கு சுற்றுச் சூழல் துறையின் அனுமதி வழங்கியதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது. புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சியில் ஜூலை 2011 முதல் டிசம்பர் 2013 வரை சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்து வந்தார் ஜெயந்தி நடராஜன். பின்னர் ராகுல் காந்தி, மற்றும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்பாடுகள் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறிய ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு விலகினார்.