தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தற்போதைய சூழல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது: கட்ஜு

webteam

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தற்போதைய சூழல் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தொடக்கம் முதலே பல்வேறு சட்டநுணுக்கங்களை கூறிவந்த கட்ஜு, மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டத்துக்கும் தானாக முன்வந்து ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள கட்ஜு, தலைவர் என யாரும் இல்லாமல், அமைப்புகள் எதுவும் இந்த போராட்டத்தை முன்னெடுக்காததால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றார். இதனால் போராட்டத்தின் முடிவு ஒழுங்கு இல்லாமல் அமைந்து விட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் போராட்டத்தினை இழுத்துச் செல்கின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் ஒரு கருத்தை ஏற்றுக் கொண்டாலும், உடனடியாக அதனை மற்றொரு தரப்பினர் மறுக்கின்றனர். மக்கள் புரட்சி எங்கெல்லாம் வெடிக்கிறதோ, அங்கு புகுந்துவிடும் மக்கள் விரோத சக்திகள் அதனை தவறான திசைக்கு மாற்றிவிடத் துடிக்கும் என்று கட்ஜூ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.