தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜிக்கு ஜன.20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

ராஜேந்திர பாலாஜிக்கு ஜன.20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

JustinDurai

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடாகவில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால் கைதை தள்ளிவைக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தரப்பிலிருந்து வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜியை வரும் 20ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் மனுத்தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடன் கைதானவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ராஜேந்திர பாலாஜியை தங்கள் காவலில் எடுக்க போலீசும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய இன்ப தமிழன் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.