தமிழ்நாடு

ஈரோடு: வீட்டில் 30 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு; வனத்துறையினர் மீட்பு

ஈரோடு: வீட்டில் 30 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு; வனத்துறையினர் மீட்பு

JustinDurai
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொடிய விஷம் கொண்ட பாம்புகளை வனத்துறையினர் மீட்டனர்.
கூத்தபூண்டியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் வீட்டிற்குள், கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அதனைப் பிடித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்த அவர், பாம்பை பிளாஸ்டிக் தொட்டிக்குள் அடைத்து வைத்தார்.
இந்நிலையில், அந்த பாம்பு தொட்டிக்குள் 30 குட்டிகளை ஈன்றுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், குட்டிகளுடன் கண்ணாடி விரியன் பாம்பை மீட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர். இதேபோல், பாறையூர் பகுதியில் வசிக்கும் நல்லசிவத்தின் வீட்டில் புகுந்த கருநாகத்தையும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்