தமிழ்நாடு

மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு நடை பாதையிலேயே உணவு வழங்கப்படும் அவலம்

மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு நடை பாதையிலேயே உணவு வழங்கப்படும் அவலம்

Rasus

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நடை பாதையிலேயே உணவு வழங்கப்படும் அவலம் நடந்து வருகிறது.

மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவர் ஆலோசனையின்படி மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக மருத்துவமனை வளாகத்தில் நவீன சமையலறை அமைக்கப்பட்டு சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு வார்டில் செவிலியர் மேற்பார்வையில் உணவு வழங்கவேண்டும் என்பது விதி.

ஆனால் உணவு எடுத்துச்செல்லும் ஊழியர்கள் வார்டுக்கு வெளியே நடைபாதையில் வைத்தே நோயாளிகளுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். நோயாளிகளுக்கான உணவை, அவர்களின் உறவினர்களும் வாங்கிச் செல்கிறார்கள். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது இவ்வாறு வழங்கப்படுவது தங்கள் கவனத்திற்கு வரவில்லை என்றும், இதனை சரிசெய்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.