தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்க நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்க நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

சங்கீதா

நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சக்கரபாணி, நியாய விலைக் கடைகளில் தரமான அரிசியை வழங்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு நாளொன்றுக்கு 500 மெட்ரிக் டன் அரவைத் திறனுடன் ஆறு ஆலைகள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நிறுவப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறினார். இந்த ஆலைகளின் மூலம் பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.