தமிழ்நாடு

ஆற்றில் மீண்டும் பொங்கும் நுரை: பொதுமக்கள் அச்சம்

ஆற்றில் மீண்டும் பொங்கும் நுரை: பொதுமக்கள் அச்சம்

webteam

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆற்றில் மீண்டும் ரசாயன நுரை கலந்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மதியம்பட்டியில் சுமார் 200 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மதியம்பட்டி வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது. இதனால் மதியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வந்தது. தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக நீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதில் அதிகமாக நுரை உருவாகி நச்சுக்காற்று கலந்து வருவதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கூறுகின்றனர். சாயப்பட்டறை கழிவு காரணமாக இவ்வாறு நுரை பொங்குகிறதா, அல்லது வேறு எதாவது காரணமா என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இது பற்றி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பெருக்கெடுத்து வந்த நீரில் அதிகப்படியான நுரை ஏற்பட்டு மல்லசமுத்திரம், மதியம்பட்டி சாலையில் செல்ல முடியாத அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.