தமிழ்நாடு

கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை: விநாயகர் சதுர்த்தியால் கிராக்கி

கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை: விநாயகர் சதுர்த்தியால் கிராக்கி

Rasus

விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை பூ சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை, கனகாம்பரம், சம்மங்கி, ரோஜா, பிச்சிப் பூ உள்ளிட்ட பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப் பூ, தற்போது சுமார் ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் சம்பங்கி பூ ஒரு கிலோ 500 ரூபாய்க்கும், அரளிப்பூ ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இதேபோல், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டிலும் பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூபாய் 1000-ஆக விற்பனை செய்யப்படுகிறது. முல்லைப் பூ 560 ரூபாய்க்கும்,  கனக்காம்பரம் 550 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அனைத்து பூக்களின் விலையும் 2 மடங்கு வரை அதிகரித்து காணப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் பெரும்பாலான பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.