தமிழ்நாடு

பொங்கல் திருநாள்.. பூக்கள் விலை கடுமையாக உயர்வு

பொங்கல் திருநாள்.. பூக்கள் விலை கடுமையாக உயர்வு

Rasus

பொங்கல் திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி, மதுரை மலர் சந்தைகளில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டம் தோவாளை சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 1600 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 1,800 ரூபாய்க்கும், முல்லைப்பூ 1,800 ரூபாய்க்கும் கனகாம்பரம் 750 ரூபாய்க்கும் விற்பனையாகியது. இதேபோல், சம்பங்கி, ரோஜா, வாடாமல்லி உள்ளிட்ட அனைத்து பூக்களும் விலையேற்றத்துடன் காணப்படுகிறது.

பனிப்பொழிவால் பூக்கள் வரத்து குறைந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவை அதிகரி‌த்தால் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் மதுரையில் மல்லிகை கிலோ 1700 ரூபாய் வரையிலும், பிச்சி, முல்லை போன்றவை கிலோ 1200 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளை செவ்வந்தி 100 ரூபாய்க்கும், கலர் செவ்வந்தி 150 ரூபாய்க்கும், சம்மங்கி கிலோ 200 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.