தமிழ்நாடு

மலர்க் கண்காட்சிக்கு தயாராகும் கொடைக்கானல்

மலர்க் கண்காட்சிக்கு தயாராகும் கொடைக்கானல்

webteam

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு முன்று வாரங்கள் ஆகியுள்ளது. ஆகவே பலரும் சுற்றுலா செல்லத் தொடங்கியுள்ளனர். அனைத்து தரப்பினரையும் சுற்றுலாவிற்கு ஈர்க்கும் வலையில் மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் தயாராகி வருகிறது. அதிலும் பசுமையும்,வண்ணமும், இளமைப் பட்டாளங்களும் ஒருசேர சங்கமிக்கும் இடமாக இங்குள்ள பிரயண்ட் பூங்கா திகழ்கிறது.

இந்தப் பூங்காவில் மே 19 தேதி புகழ்பெற்ற மலர்க்கண்காட்சி  57 வது ஆண்டாக துவங்கவுள்ளது. வசந்தக் காலத்திற்காக பூங்காவில் நடப்பட்டுள்ள, இரு வண்ண செவ்வந்தி, பல வண்ண சீமையல்லி, கல் ரோஜா, மர ரோஜா, செண்பக மலர்கள், நீலகிரி மலர்கள், நிறவாத மலர்கள், துலுக்க மல்லிகை, சுகந்தி மலர்கள், செண்டிகைப்பூ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வண்ண வண்ண மலர்கள் பல லட்சக்கணக்கில் பூத்து குலுங்கி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்க ஆயத்தமாகி வருகிறது. 

இரண்டு நாள்கள் இம் மலர்க்கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த மலர்க்கண்காட்சியை  தொடர்ந்து ‘கோடை விழா 2018’ ஆரம்பமாகி, படகு போட்டி, சைக்கிள் போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.