காவிரி கரையோர மக்களுக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாகவுள்ளது. மாலை வரை இதே நிலை நீடிக்கும் என்பதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.