தமிழ்நாடு

கூவம் ஆற்றில் வெள்ளம் – மதுரவாயல் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

கூவம் ஆற்றில் வெள்ளம் – மதுரவாயல் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

Veeramani

கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மதுரவாயல் அருகே உள்ள அடையாளம்பட்டு தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகின்றன. அதேபோல் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் அங்கிருந்தும் அதிகப்படியான தண்ணீர் வெளியாகி கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வருகிறது .குறிப்பாக பருத்திப்பட்டு, திருவேற்காடு, வானகரம், அடையாளம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. 

திருவேற்காடு காடுவெட்டியில் உள்ள தரைப்பாலம், அடையாளம்பட்டு, நொளம்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள தரைப்பாலம் என அங்கு 5 தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அங்கு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அடையாளம்பட்டு பாலத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் மதுரவாயல் மேம்பாலம் வழியாகவும், வானகரம் வழியாகவும் சென்று வருகின்றனர். வெள்ளம் கடக்கும் தரைப்பாலம் உள்ள பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.