தமிழ்நாடு

ஓகேனக்கலில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்: 7-வது நாளாக பரிசல் இயக்கத் தடை

ஓகேனக்கலில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்: 7-வது நாளாக பரிசல் இயக்கத் தடை

webteam

காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையால், ஓராண்டுக்கு பிறகு பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கலில் பரிசல் இயக்க தொடர்ந்து 7-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக காவேரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் தற்பொழுது காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் 22,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் காவேரியற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. படகு இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா ப‌ணிகள் பரிசலில் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.