தென்காசி மாவட்டம் குற்றாலம் பிரதான அருவிக்கு மேலிருந்து உருண்டு வந்த பாறாங்கற்கள் விழுந்ததில், அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகள் 5 பேர் காயம் அடைந்தனர்.
குற்றாலம் பிரதான அருவியில் தற்போது தண்ணீர் மிக குறைவாக இருந்தாலும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் குளிக்கிறார்கள். அந்த வகையில் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் சிலர் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென அருவியின் மேல்பகுதியில் இருந்து பாறாங்கற்கள் உருண்டுவந்தன. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
மீட்கப்பட்ட 5 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது . தென்காசி தீயணைப்பு மீட்பு துறையினர் அருவிக்கு மேல் ஏறி வேறு பாறைகள் உடையும் நிலையில் உள்ளனவா என ஆய்வை மேற்கொண்டனர்