தமிழ்நாடு

மீன்பிடி தடைக்காலம் 'ஓவர்' ! காசிமேட்டில் இன்று வஞ்சிர மீனின் விலை என்ன?

மீன்பிடி தடைக்காலம் 'ஓவர்' ! காசிமேட்டில் இன்று வஞ்சிர மீனின் விலை என்ன?

jagadeesh

மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜீன்14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தின் 15 கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீன்பிடி தடை காலம் முடிந்து 15-ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன்களை பிடிப்பதற்காக சென்றனர். பெரிய விசைப்படகுகளில் பிடிக்கப்பட்ட மீன்கள் இன்று காசிமேடு மீன் விறபனை ஏல கூடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மீன்பிடி தடைக்காலம் முடிவு பெற்ற முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று மீன்களை வாங்குவதற்காக ஏராளமானோர் காசிமேட்டில் குவிந்தனர்.ஞாயிற்று கிழமை வியாபாரத்தை நோக்கியே அதிகப்படியான விசைப்படகுகள் கரைக்கு திரும்பின. பெரிய அளவிலான வஞ்சிரம் உள்ளிட்ட மீன்கள் எதுவும் கிடைக்காத நிலையில் சிறிய அளவிலான மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. விலை சற்று அதிகமாக காணப்பட்டாலும் அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர். 2 மாதங்களுக்கு பிறகு மொத்த வியாபாரிகள் மீன் ஏலக்கூடத்தில் வந்து மீன்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

காசிமேட்டில் மீன்கள் விலைப்பட்டியல்:

வஞ்சிரம் கிலோ 1400 முதல் 1500
வவ்வாள் கிலோ 1000 முதல் 1100 வரையிலும்
சங்கரா கிலோ 400 முதல் 800 வரையிலும்
தோல் பாறை கிலோ 350
நெத்திலி கிலோ 250 முதல் 300
வெள்ளை ஊடான் கிலோ 150
காரப்பொடி கிலோ 100 ரூபாய்
இறால் 400 முதல் 1300 வரை
நண்டு 400 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.