செத்து கரை ஒதுங்கிய மீன்கள் pt desk
தமிழ்நாடு

கூடங்குளம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய கிளாத்தி வகை மீன்கள் - காரணம் என்ன?

கூடங்குளம் கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான கிளாத்தி வகை மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளன.

webteam

செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா

நெல்லை மாவட்டத்தில் 10 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகள் மூலம் மீன்களை பிடித்து வருகின்றனர். இதனிடையே கூடங்குளம் கடற்கரை பகுதியில் நேற்று மாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான கிளாத்தி வகை மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கின. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

செத்து கரை ஒதுங்கிய மீன்கள்

இதுகுறித்து ராதாபுரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் அதிக அளவில் கிளாத்தி மீன்கள் பிடிக்கப்பட்ட நிலையில், அவைகள் விற்பனையாகாததால் கடலில் கொட்டப்பட்டுள்ளன. அந்த மீன்கள் கடற்கரையோரம் ஒதுங்கி உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் துர்நாற்றம் வீசுவதால் கரை ஒதுங்கிய மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.