ஜல்லிக்கட்டு புதிய தலைமுறை
தமிழ்நாடு

சீறிப்பாயும் காளைகள்... இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று காலை 8 மணிக்கு உற்சாகத்தோடு தொடங்கியது.

webteam

செய்தியாளர் - சுப.முத்துப்பழம்பதி

____________

தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை திகழும் நிலையில், இந்த ஆண்டும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் தொடங்கியுள்ளது. தச்சங்குறிச்சியிலுள்ள விண்ணேற்பு அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று போட்டி நடைபெறுகிறது.

இந்த போட்டிளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 746 காளைகளும் 297 மாடுபிடி வீரர்களும் களமிறங்க உள்ளனர்.

இது இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டே தலைமையில் ஒரு ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பி, 11 ஆய்வாளர்கள், 30 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 410 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.