தமிழ்நாடு

சென்னை: தீயணைப்பு நிலைய அதிகாரிக்கு கொரோனா!

சென்னை: தீயணைப்பு நிலைய அதிகாரிக்கு கொரோனா!

webteam

சென்னை திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலைய அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

 தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பொதுமக்களை தாண்டி கடந்த சில நாட்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. சென்னையில், புதுப்பேட்டை ஆயுயப்படை பெண் காவலருக்குக் கொரானா தொற்று உறுதியாகியுள்ளது.

அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். இதேபோல், டிஜிபி அலுவலகத்தில் உள்ள உளவுத்துறை கட்டுப்பாட்டு அறை காவலர்கள் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் பெரவள்ளூர், மற்றொருவர் மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்.அந்த வகையில், திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலைய அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 57 வயதான இந்த அதிகாரி ஓமந்தூராரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி தீயணைப்பு துறை குடியிருப்பில் வசித்து வந்தவர்.

மேலும், கொத்தவால்சாவடி போக்குவரத்து காவலர் ஒருவருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றும் ஆவின் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேத்துபட்டு போக்குவரத்து தலைமை காவலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர் ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் வசிக்கிறார்.