தமிழ்நாடு

தஞ்சை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாத பள்ளிகளுக்கு அபராதம் விதிப்பு

தஞ்சை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாத பள்ளிகளுக்கு அபராதம் விதிப்பு

jagadeesh

தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத இரு பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த எட்டாம் தேதி அம்மாப்பேட்டையில் உள்ள பள்ளியில் ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அடுத்தடுத்து பல்வேறு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று மேலும் அதிகமானது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரவியுள்ளது.

இன்று மேலும் 29 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. இதில் 66 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்த பள்ளிகளுக்கு இரண்டு வாரம் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு அருகே முகாம்கள் நடத்தப்பட்டு, அங்குள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத, கும்பகோணத்தில் உள்ள சரஸ்வதி பாடசாலை பள்ளிக்கும், தஞ்சையில் உள்ள மேக்ஸ்வெல் மெட்ரிகுலேசன் பள்ளிக்கும் அபராதம் விதித்து ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார்.