தமிழ்நாடு

முந்தைய அரசிடம் கேட்க 10 முக்கிய கேள்விகள் இருக்கின்றன - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

முந்தைய அரசிடம் கேட்க 10 முக்கிய கேள்விகள் இருக்கின்றன - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

webteam

கடந்த ஆட்சியில் கடனுக்கும் செலவுக்கும் கணக்கு ஒத்துப்போகவில்லை என புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்ற பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.


இதுகுறித்து அவர் புதியதலைமுறைகக்கு அளித்த  பேட்டியில் கூறும் போது, “ கடந்த ஆட்சியில் கடனுக்கும், செலவுக்கும் கணக்கு ஒத்துப்போகவில்லை. முந்தைய அரசிடம் கேட்க 10 முக்கிய கேள்விகள் இருக்கின்றன.

அதில் ”ஒரு காலத்தில் உற்பத்தியில் 10 முதல் 10.5 சதவீதம் வரை வருமானம் ஈட்டிய மாநிலம் இன்று 7.5, 6, 6.5 சதவீதமாக மாறியது எப்படி? கடன் யாரிடம் வாங்கப்பட்டது, எவ்வளவு வட்டி செலுத்தப்படுகிறது? உள்ளிட்ட பல கேள்விகள் இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கான பதில்களை வாங்கி திட்டங்கள் தீட்டப்படும்” என்றார்.

முன்னதாக, தமிழகசட்டமன்ற தேர்தலில் 159 இடங்களை வென்று திமுக வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இன்று காலை தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுடன் 34 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அதில் 15 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவின் பால் விலைக் குறைப்பு, பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்