தமிழ்நாடு

“நாங்கதான் முதலில் பேசுவோம்” - பட்ஜெட் உரை தொடங்கும் முன்பே சபாநாயகரிடம் திமுக வாக்குவாதம்

“நாங்கதான் முதலில் பேசுவோம்” - பட்ஜெட் உரை தொடங்கும் முன்பே சபாநாயகரிடம் திமுக வாக்குவாதம்

Rasus

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கிடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தில் அமைக்கப்பட்ட 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 2021-22 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.

இந்த இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். முன்னதாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஆரம்பிக்கும்போதே எதிர்க்கட்சிகள், தங்களுக்கு பேச நேரம் வழங்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதம் மற்றும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்தார். தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டை புறக்கணித்து பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது. அதேசமயம் துணை முதலமைச்சர் தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.