மோகன் ஜி எக்ஸ் தளம்
தமிழ்நாடு

பழனி பஞ்சாமிர்தம் விவகாரம்|இயக்குநர் மோகன்ஜி மீது புகார் கொடுத்தது யார்? ஜாமீன் கிடைத்தது எப்படி?

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர் மோகன்ஜியை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

Prakash J

திருப்பதி கோயில் லட்டு பிரசாத சர்ச்சை குறித்து சமூக ஊடகத்துக்கு பேட்டியளித்த திரைப்பட இயக்குநர் மோகன்ஜி, பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் மாத்திரைகளும், கருத்தடை மாத்திரைகளும் கலக்கப்பட்டதாக பகீர் தகவல் ஒன்றை கூறியிருந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், 5 பிரிவுகளின்கீழ் மோகன்ஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருச்சி எஸ்.பி வருண்குமார் உத்தரவை தொடர்ந்து, சென்னை ராயபுரத்தில் தனது வீட்டில் இருந்த மோகன்ஜியை, தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

மோகன்ஜி கைதுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர், ”அரைகுறை புரிதலுடன் திருச்சி காவல் துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, கண்டிக்கத்தக்கது. காழ்ப்புணர்ச்சி காரணமாகக்கூட, பஞ்சாமிர்தம் குறித்து, இவ்வாறான தகவல்கள் கூறப்பட்டிருக்கலாம் என்றே மோகன் கூறியுள்ளார். அவர் கூறியதில் தவறு இல்லை” என கூறியுள்ள ராமதாஸ், ”அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்த்தைகளை புரிந்துகொண்டு, அவரை கைது செய்தது அநீதி” என தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா|வண்டியில் வைத்த பிளாஸ்டிக் பையில் சிறுநீர் கழிப்பு; வியாபாரியின் அநாகரீக செயல் - வீடியோ!

இதற்கிடையே கைது செய்யப்பட்ட இயக்குநர் மோகன்ஜி, திருச்சி குற்றவியல் 3ஆம் எண் நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மோகன்ஜி பேட்டியை முழுமையாக ஆய்வுசெய்த நீதிபதி, அவர் கைதுக்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தார். அதேசமயம், ”கைதுசெய்த விதம் சட்டவிரோதமானது என்றும் நேரில் ஆஜராக நோட்டீஸ் கொடுத்த காவல்துறையினர், பிற்பகல் 3 மணிவரை காத்திருக்காமல் முன்கூட்டியே கைது செய்தது ஏன்” என விமர்சித்தார். பின்னர் இயக்குநர் மோகன்ஜியை நீதிபதி அவரது சொந்த பிணையில் விடுத்தார்.

மோகன்ஜி மீது புகார் கொடுத்தது யார், பிணை கிடைத்தது எப்படி என்பது குறித்து அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ள பேட்டி குறித்து இந்த வீடியோவில் பார்க்கவும்.

இதையும் படிக்க: டெல்லி | யுபிஎஸ்சி மாணவியின் அறையில் ரகசிய கேமரா.. சிக்கிய வீட்டு உரிமையாளரின் மகன்! பகீர் சம்பவம்