தமிழ்நாடு

சசிகலா மீதான அந்நியச் செலாவணி வழக்கு: சாட்சிகளிடம் பிப்.12 முதல் விசாரணை!

சசிகலா மீதான அந்நியச் செலாவணி வழக்கு: சாட்சிகளிடம் பிப்.12 முதல் விசாரணை!

webteam

சசிகலா மீதான அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான வழக்கில், சாட்சிகளிடம் வரும் பிப்ரவரி 12-ம் தேதிமுதல் விசாரணை தொடங்குகிறது.

ஜெ.ஜெ.டிவிக்கு வெளிநாட்டில் இருந்து எலெக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக 5 அந்நிய செலாவணி மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது. 

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மலர்மதி முன்பு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, காணொலிக்காட்சி மூலம் ஆஜரானார். சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற விசாரணையில், சசிகலா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் வரும் 12 ஆம் தேதிமுதல் விசாரணை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.