தமிழ்நாடு

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

JustinDurai
பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகார் தொடர்பாக முன்னாள் சிறப்பு டிஜிபி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்துள்ளார். அப்போது, அந்த பெண் எஸ்.பி.யிடம் சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்விவகாரம் குறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி அப்போதைய தமிழக டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து, விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள பெண் அலுவலர் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.  இதையடுத்து முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் முன்னாள் சிறப்பு டிஜிபி மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் 400 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்திருக்கின்றனர். அதனை பெறுவதற்காக சிறப்பு டிஜிபி நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.